மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசியப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா

(தனு,சசி ஜதாட்சன்)

மட்டக்களப்பு வின்சன்ட்  மகளிர்உயர்தர தேசியப் பாடசாலையின் 2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தவிசாளர் பொன்.செல்வநாயகம்,மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,முன்னாள் அதிபரும் கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளாரும் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்வேறு சாதனைகள் படைத்த மாணவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.