இலங்கைத் தமிழ் சூழலில் காத்திரமான ஓவியக் கலையாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஓவியக் கலைஞர் திரு.சுசிமன் நிர்மலவாசனின் ஓவியங்களின் காட்சி நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள சாள்ஸ் மண்டபத்தில் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரைக்கும் இடம்பெறவுள்ளது.
”வெள்ளை” எனுந் தலைப்பில் மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை பிரபல பெண்ணிலைவாதி ஒவியர் அருந்ததி அவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இக்கண்காட்சி திரு.சுசிமன் நிர்மலவாசனின் ஏழாவது தனிநபர் ஓவியக் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.