மட்டக்களப்பு மாவட்ட பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆறுமாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் வீதி அணிவகுப்பு மரியாதை இன்று காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

பேண்ட் வாத்தியத்துடன் ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு டெலிகொம் சந்தியிலிருந்து திருமலை வீதியூடாக நகர மணிக்கூட்டு கோபுரசுற்று வட்டம்வரை வந்து பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது.

இவ் அணிவகுப்பு மரியாதையில் போக்குவரத்து, மோட்டார் சைக்கிள், வாகனங்கள் மற்றும் பொலிஸ் நாய்கள் என்பன இடம்பெற்றன.

அணிவகுப்பு மரியாதையை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா, உதவி  பொலிஸ் அத்தியட்சகர் பண்டார ஹக்மன, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ண ஆகியோர் கோட்டைமுனை பாலத்தில் வைத்து பார்வையிட்டனர்.

மாவட்டத்தின் 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட மட்டக்களப்பு பொலிஸார் இதில் பங்கேற்றனர்.

அத்துடன் போக்குவரத்து பொலிஸார் மற்றும் துப்பறியும் பொலிஸ் நாய் மற்றும் வாகனங்களும் ஊர்வலத்தில் பங்குகொண்டன.