வாழைச்சேனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
அல் கிம்மா சமுக சேவைகள் நிறுவனத்தின் அனுசரனையில் பிரதேச செயலாளர் ரீ.தினேஸ் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் மௌலவி எம்.ரீ.நபீல் (சிராஜி) அவர்களது சொற்பொழிவு இடம் பெற்றது.
பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இரு இனங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இன ஐக்கியத்தினை ஏற்படுத்தும் வகையில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் இப்தார் நிகழ்வு நடத்தப்பட்டுவருகின்றது.









