அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை கடத்துபவர் மட்டக்களப்பில் கைது

(எம்.எஸ்.நூர்)

மட்டக்களப்பில் சட்ட விரோதமாக ஆட்களை அவுஸ்த்ரேலியாவுக்கு படகில் அனுப்பி வந்ததாக கூறப்படும் மட்டக்களப்பிலுள்ள முகவர் ஒருவரை குற்றப்புலனாய்வு பொலிசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

சட்ட விரோதமாக ஆட்களை அவுஸ்த்ரேலியாவுக்கு படகில் அனுப்பிக்கும் கேந்திர நிலையமாக மட்டக்களப்பு மாற்றம் பெற்றுவருகையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்தரேலியாவுக்கு ஆட்களை அனுப்பி வந்தார் எனும் சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு கல்லடி முகத்தவாரத்தை சேர்ந்த நிரஞ்சன் டட்லி என்பவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிவுள்ள இவரது வீட்டில் வைத்து கைது செய்த இவரை குற்றப்புலனாய்வு பொலிசார் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மட்டக்களப்பில் இருந்து சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் செயற்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் இதுவரையில் முகவர் எவரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்தரேலியாவுக்கு கடலில் சென்று கொண்டிருந்த 116 பேர் மட்டக்களப்பு வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறி;ப்பிடத்தக்கது.