மட்டக்களப்பு கதிர்காம மாத யாத்திரிகர் சங்கத்தினால் இன்று காலை ஜெயந்திபுரம் குமாரத்தன் ஆலயத்தில் கதிர்காம யாத்திரிகர் கீதம் வெளியிடப்பட்டதுடன் தங்களது பாத யத்திரிகையினை ஆரம்பித்தனர்.
செல்வச்சன்னிதியில் இருந்து முனிவர்களால் எடுத்துவரப்பட்டு யாத்திரிகைக்கு கொண்டு செல்லப்படும் வேலினை சடயப்பா சுவாமிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் விஜயப்பா சுவாமிகளிடம் ஒப்படைத்து 50 ஆண்டுகளாக விஜயப்பா சுவாமிகளில் யாத்திரிகை முன்னெடுக்கப்படும் நிலையில் 50 ஆம் ஆண்டினை முன்னிட்டு இன்று யாத்திரிகை கீதம் வெளியிடப்பட்டதுடன் இன்று இரவு திருக்கோயிலில் யாத்திரிகர் பொன்விழா மலரும் வெளியிடப்படவுள்ளது.
நேற்று காலை மாமாங்கேஸ்வரர் ஆலய த்தில் இருந்து ஆரம்பமான பாத யாத்திரை ஜெயந்திபுரம் குமரத்தன் ஆலயத்தை அடைந்து அங்கு யாத்திரிகை வெளியிடப்பட்டது.
விஜயப்பா சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற யாத்திரிகை கீத வெளியிட்டில் ஜனாதிபதி ஆலோசகரும் மாகாண சபை உறுப்பினருமாகிய சி.சந்திரகாந்தன் கலந்துகொண்டதுடன் கீதப் பேளையினை சுவாமி அவருக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.வெளியீட்டினைத் தொடர்ந்து பாத யாத்திரிகையை சி.சந்திரகாந்தன் வழியனுப்பிவைத்தார்.
திருக்கோவில் வரை பேரூந்தூடாகச் செல்லும் யாத்திரிகர்கள் திருக்கோவிலை அடைந்து அங்கு நேற்று இரவு பொன் விழா மலர் வெளியீடப்பட்டதுடன் இன்று காலை பாத யாத்திகையை அங்கிருந்து தொடர்ந்தது.
நேற்று வெளியிடப்பட்ட யாத்திரிகை கீதமானது யாத்திரிரான வாகரைப் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நா.கருணைநாதன் அவர்களால் பாடப்பட்டு யாத்திரிகர் வை.லிங்கேஸ்வரனால் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.