மட்டு.மண்ணை பெருமைகொள்ளச்செய்யும் “மட்டு”காணொளி பாடல் இறுவெட்டு வெளியீடு

மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் கூட்டாக தயாரிக்கப்பட்டுள்ள “மட்டு”காணொளி பாடல் இறுவெட்டு வெளியீடு ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.

கல்லடி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30மணியளவில் இந்த இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த துஸியின் தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த காணொலி இறுவெட்டு தயாரிப்பில் மட்டக்களப்பு கலைஞர்கள் பங்குபற்றியுள்ளனர்.

எம்மவர்களின் படைப்புக்கு ஆக்கமும் ஊக்கமும் படைத்து எமது மண்ணை பெருமையடையசெய்யவேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.

எனவே இந்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.