கல்லடி பாலத்தில் இருந்து இளம்பெண் தற்கொலை முயற்சி-விரைந்து காப்பாற்றிய பொலிஸார்

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்ணை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

சற்று முன்னர் கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் இளம் பெண்னொருவர் குதித்துள்ளார்.

இந்த வேளையில்  அப்பகுதியில் நின்றிருந்த பொலிஸார் வாவியில் குதித்தவரை காப்பாற்றியுள்ளனர்.

முhலை 05 மணி தொடக்கம் குறித்த பெண் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை பொலிஸார் அவதானித்துக்கொண்டிருந்தபோதே அவர் வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சுமார் 25 நிரம்பியவர் எனவும் தாழங்குடா பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாவியில் குதித்தவர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

புதிய கல்லடி பாலத்தில் முதலாவது தற்கொலை முயற்சியாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.