வாகரை, பனிச்சங்கேனியில் நிர்மானிக்கப்பட்டுள்ள புதிய பாலத்தினை ஜனாதிபதி இதன்போது திறந்துவைக்கவுள்ளார்.
ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் 950 மில்லியன் ரூபா செலவில் இலங்கை அரசாங்கத்தினால் இந்த பனிச்சங்கேனிப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வாகரை புனித பேதுருவானவரின் தேவாலயத் திறப்பு விழாவும் திருவிழா திருப்பலி நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
இந்த நிகழவில் ஜனாதிபதி மஹிந்த ராஜகப்ச கலந்துகொள்ளவுள்ளார். கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த நவநாள் திருவிழா எதிர்வரும் 1ஆம் திகதி திருவிழாக் கூட்டுத்திருப்பலியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வாகரை பேதுருவானவரின் ஆலயம் 2004ஆம் ஆண்டு சுனாமியில் முழுமையாக பாதிக்கப்பட்டு தற்போது புதிதாக அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
