பாங்கொக் பயணமாகிறார் மட்டு.அரசாங்க அதிபர்

தாய்லாந்தின் பங்கோக்கில் செப்ரம்பர் 2ஆம்திகதி முதல் 6ஆம்திகதி வரையில் நடைபெறும் அனர்த்தங்களிலிருந்து மீளெழும்பலுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச்செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொள்கிறார்.

பூகோள அனர்த்தங்களிலிருந்து மீளெழும்பலுக்கான தலைமைத்துவக் கற்கைநெறித்திட்டத்தின் இரணடாவது பயிற்சிப் பட்டறையே பங்கொக்கில் நடைபெறுகிறது. இதன் முதல் கட்டம் கடந்த யூன் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை கண்டியில் நடைபெற்றிருந்தது.

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிறுவனம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானக் பட்டமேற் கற்கைகள் பிரிவு, மற்றும் அமெரிக்க அனர்த்த மீளெழும்பலுக்கான தலைமைத்துவ கற்கைகள் நிறுவனமும் இணைந்து இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றன.