விபத்தில் காயமடைந்த வங்கி முகாமையாளர் உயிரிழப்பு

மட்டக்களப்பு,ஏறாவூர் நகரில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வங்கி முகாமையாளர் நண்பகல் வேளையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மது காஸிம் முஹம்மது பாறூக் எனும் வாழைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் உயரிழந்துள்ளார்.

இதேவேளை ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த முச்சக்கரவண்டி சாரதியான நாகூர் சஹாப்தீன் (வயது 42) என்பவர் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன விபத்தில் சிக்கிய வங்கி முகாமையாளர் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்பட்டதுமே முச்சக்கரவண்டி சாரதி திடீரென அதிர்ச்சியடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.