இன்று(சனிக்கிழமை) காலை மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் கால் தடுக்கி வாவியின் ஆழமிக்க பகுதியில்; விழுந்துள்ளார்.
இதன் போது அவ்விடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஏனையோர் இவரை காப்பாற்றி அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தை சேர்ந்த ஏ.கந்தசாமி(60) என்பவரே இவ்வாறு கல்லடிப்பாலத்தில் விழுந்தவர் என தெரியவருகின்றது.
இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

