வவுணதீவுப் பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று வெள்ளிக் கிழமை மாலை வவுணதீவுப் பரமேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுணதீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலங்க பெனாண்டோ தலைமையில் இடம்பெற்ற இச் சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுரத்த பண்டார ஹக்மன கலந்து கொண்டார்.
அத்துடன் வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளின் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்கள்,கிராமசேவை அதிகாரிகள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டது.