வெருகல் நோக்கிய இந்து எழுச்சி யாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது

(பா. சிவம்)

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஏற்பாடு செய்திருந்த இந்து எழுச்சி திருத்தல பாதயாத்திரை இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

கடந்த செவ்வாய்கிழமை ( 27.08.2013) திருக்கோயிலிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை எதிர்வரும் வியாழக்கிழமை ( 05.09.2013) வெருகல் ஆலயத்தை சென்றடையவுள்ளதாக யாத்திரை ஒழுங்கமைப்பு செயலாளர் பா. சந்திரேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை கல்லடி புதுப்பாலம் வளியாக கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தை யாத்திரை சென்றடைந்தது.

யாத்திரிகர்கள் ஓம் நமச்சிவாய என்று உச்சரித்தவாறு சென்றனர்.

வெருகல் ஆலயம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06. 09.2013) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24.09.2013 செவ்வாய்க்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும்.