மட்டக்களப்பு வாவியில் அதிகளவில் எடுக்கப்படும் மட்டி –கிராக்கியும் அதிகரிப்பு

(பா. சிவம்)

மட்டக்களப்பு வாவியில் மட்டி பிடிக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு அதிகளவான மட்டிகள் பிடிபடுவதால் அதிகளவான வருவாயை பெற்றுவருகின்றனர்.

மட்டக்களப்பு வாவியில் மீனவர்கள் மேலதிக தொழிலாக ஓட்டு உணவுகளுள் Shell foods ) ஒன்றான மட்டியை  சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ளதால் ஆண், பெண் இருபாலாரும் இத்தொழிலில் ஈடுபட்டு எடுக்கும் மட்டியை அவித்து உடைத்து துப்பரவு செய்து சந்தையில் ஒரு சுண்டு ( 250 கிராம் ) ரூபாய் 50 இற்கு விற்பனை செய்கினறனர்.

ஒரு நாளொன்றுக்கு ஓட்டுடன் சேர்த்து  சுமார் 100 கிலோ வரையில் சேகரிப்தாகவும் உள்ளுர் பிரையாணிகளின் வருகை அதிகிரித்துள்ளதனால் இதற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

அவித்து உடைக்கும் இதன் ஓட்டை சுண்ணாம்பு ( கல்சியம் காபணேற்று ) சுடுவதற்கு பயன்படுவது குறிப்பிடத்தக்கது.