(சசி ஜதாட்சன்)
திவிநெகுமத் திட்டத்தின் கீழ் விவசாயத் திணைக்களத்தினுடாக வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் செய்கை பண்ணப்பட்ட கச்சான் அறுவடை விழா இன்று மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர்பி.உபநாதன் தலைமையில் இடம்பெற்றது.
வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவின் ஆயித்தியமலை கற்பானைப் பகுதியில் உள்;ள விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களத்தினால் திவிநெகுமத் திட்டத்தினுமாக கச்சான் விதைகள் வழங்கப்பட்டு பல ஏக்கர் நிலப்பரப்பில் கச்சான் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்கை பண்ணப்பட்ட கச்சானே இன்று அறுவடை செய்யப்பட்டது.இந் நிகழ்வில் வவுணதீவுப் பிரதேச செயலா பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விவசாயத் திணைக்களத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.