வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் 20வது ஆண்டு நிறைவையொட்டி நிகழ்வுகள்

(நடனம்)

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்;ட வேப்பையடி கலை மகள் வித்தியாலயத்தின் இருவதாவது ஆண்டு நிறைவு விழாவிழனை முன்னிட்டு  ஞாதா சிறப்பு நூல் வெளியீட்டு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் வியாழக்கிழமை அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் பொறியியலாளர் ;கலாநிதி எஸ்.கணேஸிக்கு  கல்முனை லயன்ஸ் கழகத்தினுடைய தலைவர் தேசமானிய எஸ்.சிறிரங்கன் மற்றும் ஓய்வுநிலை அதிபர் சந்திரலிங்கம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் சம்மந்துறை வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜெலில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 இந்நூலின் அறிமுக உரையினை ஆசிரியர் ஜீவராஜ் மேற்கொண்டதுடன் ஆசியுரையினை பாவாணர் அக்கரைப்பாக்கியன்நிகழ்த்தினார்.