மாமாங்கப்பிள்ளையார் ஆலய தேர் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு(PHOTOS&VIDEO)

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 09வது தினமான இன்று தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஒரு புறமாகவும் வடக் கயிரை பிடித்து இழுந்துவந்தனர்.

நாளை மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.