மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ladder-uk அமைப்பினால் (UK-ஏணி அமைப்பினால்) 25 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்களின் கல்விக்காக உதவ நூல் வழங்குவோம் என்று சில நண்பர்கள் இணைந்த ருமு யில் ஆரம்பித்த இந்த ஏணி அமைப்பானது.
பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்க கஞ்சி வழங்குவோம் என்று தங்களது பணியினை ஆரம்பித்து சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தங்களது பணியினை ஆரம்பித்து இன்று தங்களால் இயன்றளவு யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டியேழுப்பும் பணியினை வடக்குக் கிழக்கில் முன்னெடுத்து வருகின்றது.
நிலையில்; மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட யுத்தம் மற்றம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இன்று அவர்களது குடும்ப வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப 25 தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மண்முனை மேற்குப் பிரதேச செயலகம் என்பவற்றின் எற்பாட்டில் மண்முனை மேற்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ladder-uk அமைப்பின்பணிப்பாளர் ஏ.மரியதாஸ்,கிழக்குப் பல்கலைக் கழக புவியியல் துறைத் தலைவர் கலாநிதி இராஜேந்திரா,மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ச.இன்பராசா ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.