ஓந்தாச்சிமடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேக தின பாற்குட பவனி,சங்காபிஷேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஆலயங்களுல் ஒன்றான களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகமும் பாற்குட பவனியும் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

ஓம்சக்தி மடம் என்று சான்றோரால் அழைக்கப்படும் புண்ணிய பூமியாகிய ஓந்தாச்சிமடத்தில் பன்னெடுங்காலமாக அருள்பாலித்துவரும் ஸ்ரீகற்பக விநாயகருக்கு கடந்த ஆண்டு இடம்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

களுதாவளைபிள்ளையார் ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்த குருக்களினால் சங்காபிஸேக கிரியைகள் ஆரம்பமானது.இந்த நிகழ்வில் பிரபல வர்த்தகரும் சமூகசேவையாளருமான விஸ்வநாதன் கலந்துகொண்டார்.

காலை பிரதான வீதியில் உள்ள ஆலயத்தில் இருந்து பக்தர்களினால் பாற்குடம் பவனியாக எடுத்துவரப்பட்டது.இந்த பாற்குட பவனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பாற்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் 1008 சங்குகளைக்கொண்ட சங்காபிஸேக கிரியைககள் ஆரம்பமானதுடன் மகா யாகமும் இடம்பெற்றது.

இதன்போது மூல மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டதுடன் அடியார்கள் தாங்கிவந்த பாற்குடங்களும் மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து பிரதான கும்பத்துக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் சங்குகளுக்கு பூசைகள் செய்யப்பட்ட சங்காபிஸேகம் செய்யப்பட்டது.

இதன்போது பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டன.