மட்டக்களப்பு பயினியர் வீதியில் உள்ள கஃபே சில் விடுதியில் முன்னாள் தலைவர் பாரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் பிரதி செயலாளரும் பொறியியலாளருமான லயன் என்.ரஞ்சன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 2013ஆம் மற்றும் 14ஆம் ஆண்டுக்கான தலைவராக லயன் ஜெயகரன் பதவியேற்றுக்கொண்டார்.அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினரும் இந்நிகழ்வில் பதவியேற்றுக்கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்ததானம் வழங்கி ஜனாதிபதி விருது பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது லயன்ஸ் கழகத்துக்கு புதிய உறுப்பினர்கள் உள்ளீர்ப்பும் நடத்தப்பட்டது.