நேற்று தனது மகள் மானசாவுடன் பேராசிரியர் மௌனகுருவின் அரங்க ஆய்வு கூடத்தினரை ஆய்வு கூடத்தில் சந்தித்தார்.
இதன்போது பங்குகொண்ட நாடக ஆர்வம் கொண்ட இளம் தலைமுறைனர் பாலேந்திராவிடம் நிறைய வினாக்களைத் தொடுத்தனர் .பாலேந்திரா நல்ல விடைகளை அளித்தார்.
பாலேந்திரா கலைப்படைப்பின் உலகப் பொதுமையையும்,அதன் அழகியல் வெளிப்பாட்டினையும் அழுத்திக்கூறி தனது நாடகவாக்க முறைமையை தனது அனுபவங்களுக்கூடாக விபரித்தார்.
மல்டி மீடியா புறஜக்றரைப் பயன்படுத்தி தான் தயாரித்த சில நாடகங்களை அங்கு காட்டி விளக்கமளித்தமையினால் பாலேந்திராவின் நாடகங்கள் பற்றியும் அவரது நாடகவாக்க முறைமை பற்றியுமான தெளிவான விளக்கம் அங்கு வந்திருந்தோருக்குக்கிடைத்தது.
தனது விரைவான பயணத்தின்போதும் நேரமொதுக்கி தம்மைவந்து பார்த்தமைக்கும் தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கும் பாலேந்திராவுக்கு தம் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர் அரங்க ஆய்வு கூடத்தினர்.



