ஊழல்களை ஒழித்து சிறந்த கட்டமைப்பினை ஏற்படுத்தும் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்ட நேர்மையின் புகலிடம் அமைப்பினால் இன்று காலை மட்டக்களப்பு கல்லடி ஒசானிக் ஹோட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சமூக மட்ட அமைப்புகளுக்கு ஊழல் எதிர்ப்பும் ஊழலைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைகளும் சம்பந்தமான கருத்தரங்கு இடம்பெற்றது.

டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நஸனல் நிறுவனத்தின் அனுசரனையுடன் நேர்மையின் புகலிடம் அமைப்பின் திட்ட அலுவலர் சிவலிங்கம் கௌசிகன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழல்களை ஒழித்து சிறந்த கட்டமைப்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்தரங்குகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக டிரான்ஸ் பரன்ஸி இன்டர்நஸனல் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டி.எம் திசாநாயக மற்றும் ஊடக முகாமையாளர் சான் விஜயசிங்க ஆகியோரும் விரிவுரையாளர்களாக அமைப்பின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எப்.எக்ஸ் விஜயகுமார் மற்றும் சட்டத்தரணி எஸ் நிரஞ்சன் மற்றும் மனிதவள அபிவிருத்தி நிறுவகத்தின் பயிற்சி இலகுபடுத்துனர் ரொபின் அன்பழகன் குருஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் பயிற்சியாளர்களாக பங்குபற்றினர்.

இக்கருத்தரங்கில் ஊழல்கள் பற்றியும் ஊழலைக் கட்டுப்படுத்துவதில் சமுக மட்ட அமைப்புகளின் பங்களிப்பு மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் என்பன பற்றியும் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.