5ம் ஆண்டு மாணவர்களுக்கான முன்னோடி கல்விக் கருத்தரங்கு

5ம் ஆண்டு மாணவர்களுக்கான முன்னோடி கல்விக் கருத்தரங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியின் மட்டக்களப்பு நகரக்கிளையின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன்  ஆலோசனையுடன் சிவானந்தா தேசிய பாட சாலை கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள கட்சியின் செயற்குழு உறுப்பினர் திருமதி செல்வி மனோகரன் தலைமையில் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பங்கேற்ற இச் செயலமர்வில் வளவாளராக ஆரம்பக்கல்வி ஆசான் ஜெயக்காந்தன் கலந்து கொண்டதுடன்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அக்கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள் ஆகியோரும் கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தனர்.