எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் மாபெரும் சிரமான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சிவநாதன் தலைமையில் மாநகர உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.
கனரக வாகனங்கள் கொண்டு ஆலயத்தின் வளாகத்தில் உள்ள குப்பைகள் இதன்போது அகற்றப்பட்டன.
அத்துடன் ஆலயத்தின் சூழவுள்ள பிரதேசங்களும் மாநகர ஊழியர்களினால் சிரதானம் மூலம் சுத்தம் செய்யப்பட்டன.