கடந்த ஐந்து தினங்களாக இடம்பெற்றுவரும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இன்று மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பட்டு கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
நடனங்கள் மற்றும் பறவைக்காவடிகள் சகிதம் இந்த பட்டுக்கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இதன் சிறப்பம்சமாக அமர்ந்த நிலையில் உடம்பில் அலகேற்றப்பட்டு அடியார் ஒருவர் பறவைக்காவடி எடுத்து அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார்.
மேளங்கள் முழங்க சிறுவர்களின் காவடியாட்டத்துடன் பக்தி பூர்வமாக பட்டுக்கொண்டுசெல்லப்பட்டது.