மாகாண மட்ட போட்டியில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சாதனை

நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.

5 பெரு விளையாட்டுக்களில் முதலாம் இடத்தை பெற்றதன் மூலம் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

19 வயது பெண்கள் பிரிவு கூடைப்பந்தாட்டம்,15,17,19 வயது பெண்கள் பிரிவுகளுக்கான வலைப்பந்து, மற்றும் 19 வயது பிரிவுக்கான எறிபந்து ஆகிய 5 பெரு விளையாட்டுக்களில் சம்பியன் பட்டத்;தை பெற்றதன் மூலமே இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இம் மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக பாடசாலை அதிபர் தி.ரவி, உப அதிபா, பிரதி அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்களான ஆ.சந்துரு, எம்.எம்.எம், றியாஸ், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கே.விநாயகமூர்த்தி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள.