களுவாஞ்சிகுடி மற்றும் களுவன்கேணி ஆகிய பகுதிகளிலேயே இந்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவோரின் வலைகளில் அதிகளவு சூரை மீன்கள் படுவதால் மீனவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களுக்குட்பட்ட பகுதியிலேயே அதிகளவான சூரை மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
கடலின் கரைப்பிரதேசங்களில் சிறிய ரக மங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுவதனால் அதனை உண்ணுவதற்காக வரும் சூரை மீன்களே அதிகளவில் வலைகளில் சிக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்தார்.
குடந்த இரு தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 20ஆயிரம் கிலோ சூரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு கிலோவுக்கு குறைந்த சிறிய ரக சூரை மீன்களே இவ்வாறு கரைவலையில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாதம் அதிகளவு மீன்கள் பிடிபடும் மாதமாகவும் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.