(Husna)
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி என்.சத்தியானந்தி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக முதலமைச்சரின் செலாளரும் உளு;ளுராட்சி அமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி ஆகியோர் கலந்து கொண்டு குடி நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
சுத்தமான குடி நீரை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் திட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் முப்பத்தொன்பது மில்லியன் ரூபா நிதியிலும் மதுரங்கேணி கிராமத்தில் இருபத்தொன்பது மில்லியன் ரூபா நிதியிலுமாக அறுபத்தெட்டு மில்லியன் ரூபா ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் (துஐஊயு) நிதியுதவியுடன் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.




.jpg)


.jpg)
