கொக்கட்டிச்சோலையில் தற்கொலைக்கு முயன்ற தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொது மயானத்தில் உள்ள பற்றைக் காட்டில் இருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்ய முற்பட்டவேளை , அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

நேற்று மாலை வேளையில் குடும்பத்தகராறு காரணமாக கொக்கட்டிச்சோலையை சேர்ந்த தாயும் மகளும் மேற்படி பொது மயானத்தில் அமைந்துள்ள பற்றைக்காட்டில் உள்ள மரம் ஒன்றில் இருவரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்ய முற்பட்டுள்ளனர்.

இதனை அறிந்த கொக்கட்டிச்சோலைப் பொலிசார் உடன் ஸ்தலத்திற்கு விரைந்து அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து, மகிழடித்தீவு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பலத்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.