தேசிய கபடிப் போட்டியில் மட்டக்களப்பு ஆண்கள் அணி சம்பியன்

( சசி ஜதாட்சன்)

25 ஆவது யூத் ஸ்ரீ லங்கா தேசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான கபடிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி முதல்28 வரை பொலனறுவையில் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பன இணைந்து நடாத்தும் 25 ஆவது யூத் ஸ்ரீ லங்கா தேசிய விளையாட்டு விழா இடம்பெற்ற நிலையில் ஆண்களுக்கான கபடிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு,இரத்தினபுரி அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

இரத்தினபுரி அணியினருடன் எதிர்த்தாடிய மட்டக்களப்பு அணியினர் 12:23என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கத்தினை தட்டிக்கொண்டனர்.

இப் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக எஸ்.சுகந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ் அணியினர் ஏற்கனவே ஒரு தடவை தங்கப் பதக்கத்தையும் மூன்று தடவைகள் வெள்ளிப் பதக்கத்தையும் ஒரு தடவை வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.