புதுக்குடியிருப்பில் தேசிய சுனாமி ஒத்திகை

(எம்.எஸ்.நூர்)

இலங்கையின் 14 மாவட்டங்களிலும் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு சம நேரத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி முன்னாயத்த ஒத்திகை இன்று புதுக்குடியிருப்பு வடக்கு கிராமத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த சுனாமி முன்னாயத்த ஒத்திகையில் இராணவத்தினர் மற்றும் பொலிசார், கிராம உத்தியோகத்தர் அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

இந்த அனர்த்த ஒத்திகையின் போது புதுக்குடியிருப்பு வடக்கு கிராம மக்கள் அக்கிராமத்திலுள்ள கண்ணகி மகா வித்தியாலத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு விழிப்புணர்வு முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.