கல்முனையில் மாணவர் கௌரவிப்பு

(நடனம்)

கல்முனை தமிழ்ச்சங்கமும், மாணவர்மீட்புப் பேரவையும் இணைந்து கல்முனை வலயப்பாடசாலைகளில் 2012ம் ஆண்டு உயர் தரப்பரீட்சையில் 3 ஏ சித்திபெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை  கல்முனை நால்வர் கோட்ட தாமரை மண்டபத்தில் தமிழ்ச்சங்கத்தலைவர் கலாநிதி பரதன் கந்தசாமி தலைமையில் இடம்பெற்றது.

இதில் கல்முனை கல்வி வலயத்தில் கடந்ந வருடம் உயர்தரத்தில் 3 ஏ சித்தி பெற்ற 25  தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராசா, தென்கிழக்குப்பல்கலைக்கழக துணைவேந்தர்  கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்,கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் க.லவநாதன்,கல்முனை மாணவர் மீட்புப் பேரவைத்; தலைவர் கலாநிதி பொறியியலாளர் எஸ்.கணேஸ், பாவாணர் அக்கரைப்பக்கியன் ,அருட்சகோதரர்மத்தீயு ,செங்கதிரேன் கோபாலகிருஸ்ணன்  உட்பட பலர் கலந்து கொண்டனர் .