மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி எம்.என்.ரஹீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களின் பிரதிப்பொலிஸ்மா அதிபர் இந்திரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்த கஞ்சா போதைப்;பொருளை கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது நான்கு கிலோவும் 150 கிராம் கொண்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுhய்ந்தமருது பிரதான வீதியில் கஞ்சா வைத்திருக்கும்போதே குறித்த நபரிடம் இருந்து கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அவரையும் கஞ்சாவையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
