நாககட்டு நாகதம்பிரான் ஆலயத்தின் தேசத்து பொங்கல் நிகழ்வு

(தனு)

மட்டக்களப்பின் மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் படுவான்கரை பிரதேசத்தின் நாககட்டு நாகதம்பிரான் ஆலயத்தின் தேசத்து பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான நாக கட்டு ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு சிறப்பாக இடம்பெற்றுவந்தது.

நாக கட்டு ஆலயமானது மட்டக்களப்பின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளதுடன் மட்டக்களப்பின் வரலாற்று முறைகளை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் ஆலயமாகவும் உள்ளது.

மட்டக்களப்பின் கிராமிய வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாகவும் நாககட்டு நாகதம்பிரான் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கினை படுவான்கரை பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் இணைந்து நடத்திவருவதுடன் மிக முக்கியமாக தேசத்துக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெறுகின்றது.

அதற்கு முன்பாக ஆலயத்தில் பால் பழம் வைக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை இந்த நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து மற்றும் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

அத்துடன் ஆலயத்தின் திருப்பணிக்கும் நிதியுதவிகளையும் இதன்போது இருவரும் வழங்கினர்.