வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரவெட்டி விநாயகர் ஆலயத்துக்கு மாகாண சபை உறுப்பினரான கருணாகரமின் பன்முகப்படுத்தப்பட்ட 75ஆயிரம் ரூபா நிதியொதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வு வவுணதீவு,கரவெட்டி விநாயகர் ஆலய முன்றிலில் கரவெட்டி பிரதேச கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றய அவர்,
வுடக்கு தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.வடக்கு தேர்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகவும் பயந்த நிலையில் உள்ளது.இந்த தேர்தல் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமானதாகும்.
இன்று வடக்கு தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக பார்த்துகொண்டுள்ளன.இந்த தேர்தலில் பல குளறுபடிகளை செய்து அரசாங்க வெற்றிபெறமுயற்சிகளை மேற்கொள்ளும்.எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் வெற்றிபெறும்.
கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு முழு மையாக வாக்களிக்காத காரணத்தினால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அதிகமாக ஆசனங்களை பெறமுடியவில்லை.கிழக்கில் தமிழ் மக்கள் மிகவும் குறைந்தளவிலேயே தமது வாக்குகளை பதிவுசெய்திருந்தனர்.
எமது முஸ்லிம் சமூகத்தினர் வாக்களிப்பு தினத்தன்று முதல்வேலையாகச்சென்று வாக்களித்துவிட்டே தமது ஏனைய பணிகளை மேற்கொண்டனர்.ஆனால் தமிழ் மக்கள் அதில் பெரிதாக அக்கறை செலுத்தாத நிலையே இருந்தது.
வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒரே குறிக்கோளில் வாக்களிக்கவேண்டும்.தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிப்பதன் மூலமே வடகிழக்கில் தமிழ் மக்கள் முழு அதிகாரங்களும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
13வது அரசியலமைப்புச்சட்ட தமிழ் மக்களுக்கு இறுதி தீர்வு அல்ல.அதில் இருக்கும் அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்தி எமது உரிமையை பெற்றுக்கொள்ளும் இறுதித்தீர்வை நோக்கி பயனிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தலாம்.அதனால்தான் இலங்கை அரசாங்கம் 13வது சட்டத்தினை இல்லாமல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இன்று அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அபிவிருத்தியை காட்டி தமிழ் மக்களுக்கு உரிமை தேவையில்லையென்கின்றனர்.நாங்கள் கடந்த 30 வருடமாக உரிமைக்காகவே போராடினோம்.அபிவிருத்தி தேவையில்லையென்று நாங்கள் கூறவில்லை.உரிமையெதுவும் இல்லாத இடத்தில் அபிவிருத்தியால் எதுவித பிரயோசனமும் இல்லை.ஒரு கடைத்தெருவுக்கு தாயும் அவரது மகளான சிறுமியும் போயிருந்தனர்.சிறு கடைத்தெருவில் உள்ள கடைகளில் உள்ள பொருட்களை தாயிடம் அடிக்கடி கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்தாள்.பல கடைகளுக்கு சென்றபோதும் தாய் எதுவித விளையாட்டுப்பொருளும் வாங்கிக்கொடுக்கவில்லை.
சிறிது தூரம் சென்றதும் சனநெரிசலில் சிறுமி தாயை பிரிந்து தனியாக அழுதுகொண்டிருந்தால்.அதன்போது அப்பகுதியில் நின்றவர்கள் குழந்தையை அணுகி குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக பல்வேறு விளையாட்டுப்பொருட்களை வாங்கிக்கொடுத்தனர்.ஆனால் பிள்ளை அழுகையை நிறுத்தவில்லை.
அதுபோல் அழும் பிள்ளைக்கு அந்த தாய் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று தமிழ் மக்களுக்கு தாய்போன்ற அந்த உரிமை முக்கியம்.அந்த குழந்தைக்கு அந்த பொம்மைகள் தாயை காணாதவேளையில் எந்தவித பொருளும் பெரிதாக தெரியவில்லை.எனவே உரிமை இல்லாதவனுக்கு அபிவிருத்தியென்னும் பொருள் பெரிதாக தெரியப்போவதில்லை.இதனை அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.







