சம்மாந்துறையில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம் பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் கைதான குறித்த நபரிடம் இருந்து, கனிணி, கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 7ம் திகதி, 86,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.