(எ.லியோன் ராஜ்)
மட்டக்களப்பு புன்னைச்சோலை பாலர் பாடசாலை சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று வெள்ளழக்கிழமை காலை 09.00 மணியளவில் புன்னச்சோலை கலாச்சார மண்டபத்தில் புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தலைவர் திரு. எஸ்.ஞானப்பு தலைமையில் கண்காட்சிஆரம்பித்துவைக்கப்பட்டது.
இக் கண்காட்சியை பார்வையிட வருகை தந்த அதிதிகளை மாணவர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு உளவியல் நிலைய பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் பொன்.செல்வநாயகமும் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் (முன்பள்ளி) எம்.புவிராஜா, பிரதேச அபிவிருத்தி வங்கி மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே.சத்தியநாதன், கிராமசேவை உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.
இக் கண் காட்சிக்கான பொருட்களை தயாரிப்பதற்கு, இப்பாடசாலை சிறார்களின் பெற்றோர்கள் தமது ஆக்க திறமைகளை முழுமையாக பங்களிப்பு செய்துள்ளமை சிறப்பு அம்சமாகும்.
இக் கண் காட்சியை பார்வையிட இப்பகுதி பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் வருகை தந்திருந்தனர்;.
இப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு இப்பாடசாலை அதிபர் .எம் .அருந்தவம்;, ஆசிரியர்களான ,டி. தனுஜா மற்றும் கெ. நிறோலக்ஷி ஆகியோரும் தமது மாணவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து கண் காட்சியை சிறப்பித்தனர்.
இறுதியாக நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் இக்கண் காட்சிக்கு பொருட்களை தயார் செய்த மாணவர்களுக்கும், இவர்களின் பெற்றேர்களுக்கும் பரிசில்கள் வழங்கினர்.