கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஸேக இறுதி தினமான இன்று சங்காபிஸேக நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.கடந்த 41 நாட்களாக ஆலயத்தில் இடம்பெற்றுவந்த மண்டலாபிஸேக பூசையினையடுத்து இன்று காலை 1008 சங்குகள் கொண்டு மஹா சங்காபிஸேகம் இடம்பெற்றது.
கிழக்கிலங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயம் நீண்ட வரலாற்றினையும் பாரம்பரியத்தினையும் கொண்டதாகும்.
கடந்த 50 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தின் மஹா கும்பாபிஸேகம் இடம்பெற்று தொடர்ந்து மண்டலாபிஸேகம் இடம்பெற்றுவந்தது.
இந்த மண்டலாபிஸேகத்தின் பூர்த்தி தினமான இன்று இடம்பெற்று இந்த சங்காபிஸேகத்தில் விசேட பூசைகள்,விசேட கணபதி ஹோமம் என்பன இடம்பெற்றதுடன் அபிஸேக திரவியங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 1008 சங்குகளுக்கும் பூசைகள் செய்யப்பட்டு பிரதான கும்பத்துக்கு விடே பூசைகள் இடம்பெற்றதுடன் ஆலய முன்றிலில் வைக்கப்பட்டிருந்த பஞ்சமுக விநாயகருக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பிரதான கும்பம் பக்தர்கள் புடை சூழ மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
இந்த உற்சவத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெருளமனா அடியார்கள் கலந்துகொண்டனர்.
சங்காபிஸேகத்தினை தொடர்ந்து ஆலயத்தின் கும்பாபிஸேகம் தயாரிக்கப்பட்ட கும்பாபிஸேக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது.