மட்டக்களப்பு மாணவியை வெற்றிபெறச்செய்வோம்

தனியார்  தொலைக்காட்சியில் இடம்பெற்றுவரும் சுப்பர் ஸ்டார் பாடல் போட்டியில் மட்டக்களப்பில் இருந்து தெரிவாகி தனது திறமையினை வெளிக்காட்டிவரும் மாணவிக்கு நாங்கள் அனைவரும் இணைந்து எமது ஆதரவுக்கரத்தை நீட்டுவோம்.
மட்டக்களப்பு கூழாவடியை சேர்ந்த மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் கல்வி கற்றுவரும் எஸ்.சனுஜாவுக்கு வாக்களிக்குமாறு மட்டக்களப்பு சமூகத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எமது சந்ததிக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்கவேண்டியது எமது கடமை.அந்த வகையில் சக்தி சூப்பஸ்டாரில் கலக்கிவரும் சனுஜாவுக்கு வாக்களிப்போம் என பல்வேறு பகுதிகளிலும் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

நாங்களும் எமது மாணவிக்கு வாக்களிப்போம்.கையடக்க தொலைபேசியில் வாக்களிக்கவேண்டிய முறை SKS இடைவெளி 12 என்று டைப்செய்து 7788 க்கு அனுப்பவேண்டும்.