அவுஸ்ரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முற்பட்டவர்கள் ஏறாவூரில் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு தங்கியிருந்ததாக கருதப்படும் மூவரைத் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்தே மூவரும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் மூவரையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்கள் மூவரும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழக்கிலிருந்து கடல் மார்க்கமாக இவர்கள் அவுஸ்திரேலியா நோக்கிய கடற்பயணத்தை மேற்கொள்ள உத்தேசித்திருந்தனர் என்றும் விசாரணையின் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.