தேசிய சமாதானப்பபேரவையின் எற்பாட்டில் கற்றறிந்த பாடங்கள் நல்லினக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றை சட்ட ரீதியாக தீhப்பதற்கான வழிமுறைகளும் எனும் தலைப்பிலேயே இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசங்களை சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள பிரமுகர்கள் தேசிய சமாதானப்பேரவையின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரோவும் மற்றும் அவருடன் அங்கு கூட சென்ற சிலரும் தாங்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டதையடுத்து அவர்களும் அதில் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து இங்கு தானும் உரையாற்ற வேண்டுமென மட்டக்களப்பு மங்களராமய விகாதராதிபதி கேட்டுக்கொண்டதையடுத்து அவரும் அதில் கருத்து தெரிவிக்க சந்தற்பம் வழங்கப்படடுள்ளது.
இவர் உரையாற்றுகையில் தலைப்பிற்கு அப்பால் செல்வதை அவதானித்தவர்கள் அவரது உரையை நிறுத்துமாறு வலியுறுத்தியதை அடுத்து குழப்பம் நிலவிய போது விகாராதிபதியும் அவரது உதவியாளர்களும் சேசிய சமாதானப் பேரவையின் அதிகாரிகளை சரமாரியாக தாக்கியதுடன் பங்குபற்றியவர்களையும் தர்கியுள்ளனர்.அச்பவத்தைத் தொடர்ந்து பதட்டம் நிலவியதுடன் சம்பவத்தை அடுத்து பயந்த பெண்கள் வெளியேற முற்பட்ட போது அவர்களை சுற்றிய விகாராதிபதி உள்ளிட்ட குழுவினர் தாக்க முற்பட்டுள்ளனர்.பெண்கள் குக்குரலிட்டு கத்தியவாறு ஆண்கள் உள்ள பக்கம் ஓடி பாதுகாப்பைத் தேடிளுய்யனர். இதனை அடுத்து செயலமர்வு இடம்பெற்ற மண்டபத்தினையும் பூட்டி தமது கட்டுப்பாட்டின் கீழ வைத்துள்ளார்.உள்ளே இருந்தவாறு சம்பவம் தொடர்பாக வெளியே தகவல் சென்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் பொதுமக்களும் சென்றதுடன் பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
இதையடுத்து கூட்டம் இடை நிறுத்தப்பட்டு பங்கு பற்றுனர்கள் சிலர் மண்டபத்துக்கு வெளியேயும் சிலர் உள்ளேயும் மூடப்பட்ட மண்டபத்துக்குள்ளேயும் காணப்பட்டன.
இதன் போது அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி அஜித் பிரசன்னா மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொறப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தலைமையிலான பொலிசார் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அங்கு ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்தினர்.
இதன் போது இந்த கூட்டத்துக்கு எந்தவித அழைப்புமின்றி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி அதிகாரிகளையும் பங்கு பற்றுனர்களையும் தாக்கியதாகவும் தூசன வார்த்தைகளால் மிக கடுமையாக பேசியதாகவும் அச்சுறுத்தியதாகவும் செயலமர்வு ஏற்பாட்டாளர்களான தேசிய சமாதான பேரவையின் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்தனர்.
தனக்கு இந்த கூட்டத்துக்கு அழைப்பு வந்ததாகவும் அழைப்பின் பேரிலேயே தான் வந்ததாகவும் இதன் போது தன்னை தாக்கியதாகவும் மட்டக்களப்ப மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்திணதோரோ பொலிஸாரிடம் தெரிவித்தார்.இது தொடர்பான இவர்களின் வாக்கு மூலங்களை பொலசார் பதிவு செய்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா நிலைமையினை நேரடியாக விசாரித்ததுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விடயங்களை கேட்டு அறிந்து கொண்டார்.
இங்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் விடயத்தை கேள்வியுற்று அங்கு சமூகமளித்து நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.
இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.