மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா

(ஏ.லியோன் ராஜ்)   

மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த பாலர்பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
 இவ் விழாவுக்கு வருகை தந்த அதிதிகளை மாணவர்கள் மலர் மாலை அணிவித்து பேண்ட் வாத்தியத்துடன் அழைத்து  கௌரவிக்கப்பட்டனர்.
       
இந் நிகழ்வுக்கு அமிர்தகழி மெதடிஸ்த ஆலயகுரு. அருட்திரு. எஸ்.பஞ்சரட்ணம் அவர்கள் தலைமை தாங்கினார்.

பிரதம அதிதிகளான கோட்டைமுனை மெதடிஸ்த ஆலய சேகர முகாமைக்குரு அருட்திரு. அ.சாம்சுவேந்திரன் அவர்களும், உதவிக்கல்விப் பணிப்பாளர்-முன்பள்ளி வலயக்கல்வி மட்டக்களப்பு அலுவலக அதிகாரி எம் புவிராஜ் சிறப்பு அதிதிகளாக கலந்துகொன்டனர். விசேட அதிதியாக ஆரம்பக்கல்வி- உதவிக்கல்விப் பணிப்பாளர்  எம்.சச்சிதானந்தம்,கௌரவ அதிதியான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  உளநல வைத்திய நிபுணர் டாக்டர். த.கடம்பநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வுகள் சிறுவர்கள் மனதில் போட்டி தன்மையை ஏற்படுத்த கூடாது என்பதற்காக இப் பாடசாலை ஆசிரியர்கள் விளையாட்டு நிகழ்வுகளை விளையாட்டு விழாவாக ஏற்பாடு செய்திருந்தமை வரவேற்க தக்க விடயமாக அமைந்திருந்தது.

இவ் விழாவில் சிறுவர்கள் தமது விளையாட்டு திறமைகளையும் ஆர்வத்தையும் காட்டி இவ் விழாவை மிக சிறப்பாக இடம்பெற செய்தார்கள். இவ் விழாவுக்கு இப் பகுதி பாலர்பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ் விளையாட்டு நிகழ்வில் இப்பாடசாலை மாணவர்;களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

விழாவின் இறுதியாக விளையாட்டுகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கும், அதிதிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு விழா இனிதாக நிறைவு பெற்றது.