தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய கன்னன்குடாப் பிரிவு மக்களின் 19 ஆம் நாள் திருவிழா.

(சசி ஜதாட்சன்)

கிழக்கிலங்கையில் சின்னக் கதிர்காமம் என வர்ணிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கன்னன்குடாப் பிரிவு மக்களின் 19 ஆம் நாள்த் திருவிழா நேற்று இரவு அதாவது ஞாயிற்றுக் கிழமை இரவு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கன்னன்குடாப் பிரிவைச் சேர்ந்த  கன்னன்குடா, மண்டபத்தடி, குறிஞ்சாமுனை, பருத்திச்சேனை, காயான்மடு, புளியடிமடு ஆகிய கிராம மக்களுக்குரிய திருவிழாவாகவே 19 ஆம் நாள் திருவிழா காணப்படுகின்ற நிவையில் இக் கிராமங்கள் இணைந்தே நெற்று இரவு மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

இதன்போது இடம்பெற்ற கிரியை நிகழ்வுகளையும் பூசையினையும் சுவாமி வெளிவீதி வலம் வந்து மலை உச்சியில் அமைந்தள்ள மலைப் பிள்ளையார் ஆலயத்தை செல்லும் காட்சியினையும் படங்களில் காணலாம்.

இன்று 20ஆம் திருவிழா கொக்கட்டிச்சோலை மக்களினால் மேற்கொள்ளப்படும் நிலையில் நாளை 21 ஆம் திருவிழா முனைக்காட்டு மகளின் உபயத்தில் இடம்பெறுவதுடன் நாளை மறுதினம் அதாவது புதன் கிழமை காலை 6.00மணிக்கு பெருமானின் தீர்த்தோற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.