மண்டூர் முருகன் ஆலய உற்சவம் 31ஆம் திகதி ஆரம்பம்

(தவக்குமார்)

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக கருதப்படும் மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


கிழக்கிலங்கையில் அனைவராலும் தரிசிக்கப்படுகின்ற
தலங்களில் ஒன்றான சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர்
முருகனாலயத்தில்  மண்டூர் பிரதேசத்தை உள்ளடக்கிய அனைத்துப்
பொதுமக்களின்  ஆதரவுடன்  பாரிய    சிரமதானப் பணி  ஒன்று  ஆலய
வளாகத்தை உள்ளடக்கி நடைபெற்றது.

அதாவது எதிர்வரும் 31ம் திகதி  ஆலய உற்சவம் ஆரம்பமாகவுள்ளதால்
இதனை மையப்படுத்தி  சுத்தப்படுத்தும்    நோக்கில்   இச் சிரமதானம்
நடைபெற்றது.

இதற்கு மண்டூர் வெல்லாவெளிப்    பொலிசார்  ஆதரவு
வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறானதோர் பாரிய  சிரம
தானம் பல ஆண்டுகளுக்குப்பின்னர்  இவ்வருடமே  நடைபெற்றது
என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய   சிரமதானப்பணிக்காக  பெருந்தொகையான பொதுமக்கள் மற்றும்  பொது   அமைப்புக்கள்   ஆன்மிக அமைப்புகள் கலந்துகொண்டன.

இம்முறை நடைபெறவிருக்கும் ஆலய உற்சவத்தினை  புதிய வண்ணக்
கராக தெரிவு செய்யப்பட்ட  பொ.செல்வக்குமார்  தலைமை
தாங்கி நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.