மண்டூர் முருகனாலயத்தில் வரலாற்று ரீதியாக திருச் சீட்டு எழுதும் நிகழ்வு

(தவக்குமார்)

எதிர்வரும்  31.07.2013ம் திகதி  மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளதால் பழமையையும் தொன்மையையும் சித்தரிக்கும் வகையிலும் வரலாறுகளின்    பல   சம்பிரதாயத்தையும்      மரபுகளையும் கொண்ட   இவ்வாலயம்   என்பதனால்  வருடம்   தோறும்  ஆலயபொடியேற்றத்திற்கு     முன்பாக திருச்   சீட்டு    எழுதும்    சம்பிதாயம்   இவ் ஆலயத்தில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.
திருச் சீட்டு என்பது     இவ்வாலய    உற்சவகாலங்களில்  திருவிழாக்களில்
பங்குடைய அதாவது பாரம்பரியத்தின்     அடிப்படையில்  உரிமையுடையவர்
களுக்கான குருச் சீட்டு எழுதுதல்      குறிப்பாக    அனைவராலும்     ஏற்றுக்
கொள்ளும் வகையில்  கடிதமூலமான    அறிவிப்பினை    கொடுப்பதே   இச்
திருச் சீட்டு எமுதுதல் என்பதேயாகும்.

இன்    நிகழ்வு  இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் ஆலயத்தின்   வீதியிலுள்ள  சம்பிரதாய மூலமாக நடைபெறுகின்ற அரச மரத்தின்  கீழ் நடைபெற்றது.

முதலில்இறைவணத்தினை கு.ஜதிஸ்குமார் செலுத்தினார் பின்னர் இவ்வாலயத்தின் வண்ணக்கர் பொ.செல்வக்குமார்   தலைமை    தாங்கி   இன்   நிகழ்வினை நடத்தினார்.

இன் நிகழ்வின் போது ஆலயத்தில் பணிபுரியும் பணியாட்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தமை  குறிப்பிடத்தக்கது.   இன்
நிகழ்வினை கண்காணிப்பதற்காக மண்டூர்   வெல்லாவெளிப்    பொலிஸார்
பிரசன்னமாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.