(எம்.எஸ்.நூர்)
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட மருந்து வில்லைகளை வைத்து வழங்குவதற்கான பக்கட்டுக்கள் மற்றும் வைத்திய சாலையை துப்பர செய்யும் உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையின்
களஞ்சியப் பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டன.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தேசமான்ய டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் இதனை கையளித்தார்.
இந்த நிகழ்வில் டாக்டர் எம்.ஏ.எம்.பிர்னாஸ், மற்றும் களஞ்சிய பொறுப்பாளர் ஜனாபா றபீக்கா றசீத் உட்பட அதன் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது மருந்து வில்லைகளை வைக்கும் ஒரு இலட்சம் பக்கட்டுக்கள் மற்றும் வைத்திய சாலையை துப்பரவு செய்யும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.