மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் மாபெரும் சிரமதானம்

மட்டக்களப்பு மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வாவிக்கரையில் மாபெரும் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் வருடாந்த செயற்றிட்டத்தின் கீழ் டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சிரமதானம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பில் உள்ள ஒவ்வொரு பங்கில் இருந்தும் இளைஞர் யுவதிகள் இந்த சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

இந்த சிரமதான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.