மண்முனை வடக்கில் இளைஞர் வீட்டுத்திட்ட வீடு கையளிப்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச செயலகம் தோறும் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் வீட்டுத்திட்டங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டுவருகின்றன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட வீடு மக்களிடம் கையளிக்கப்பட்டன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யூத் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகிந்த சிந்தனையின் கீழ் கிராமம் தோறும் வீடு திட்டத்தின் கீழ் இளைஞர் விவகார அமைச்சின் ஆலோசனையின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச செயலகம் தோறும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

இதன் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட இளைஞர் வீட்டுத்திட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டது.

நா.குகேந்திரா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் வரதராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என் நைறூஸ்,மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோத்தர் கலாராணி,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மிகவும் வறுமை நிலையில் இருந்த இப்பிரதேச யுவதி ஒருவருக்கு இந்த வீடு அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.