நேற்று உணவு மற்றும் பழக்கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார கண்காணிப்பு நடவடிக்கையின்போது சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்ககூடிய பொருட்களை விற்பனைசெய்தோர் மற்றும் சுகாதாரத்துக்கு தீங்கானமுறையில் உணவு விடுதியை வைத்திருந்தமை ஆகியவை தொடர்பில் இருவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் மணிமாறன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
இது தொடர்பான வழக்கினை எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா இருவருக்கும் தலா ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தார்.
மட்டக்களப்பு நகரில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் பழ விற்பனை நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் மணிமாறன் தெரிவித்தார்.
முறையற்ற வகையில் சுகாதாரத்துக்கு கேடான வகையில் செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
முறையான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இவ்வாறு சிலர் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
